Saturday 26 May 2012

உற்சாகமிகு நாற்பெரும் விழா !!











இம்மாதம் பணி ஓய்வு பெறும் நான்கு தோழியர்க்கு 
பாராட்டு விழா!
சேவை மேம்பாட்டு கருத்தரங்கம் !
PGM அலுவலகத்தின் கிளை மாநாடு !!
மாவட்டச் செயற்குழு !  

என்று நான்கு  நோக்கத்தோடு கூட்டப்பட்ட சிறப்புக் கூட்டம்
மாவட்டத்  தலைவர்  தோழர். எஸ்.ஸ்ரீதர்    தலைமையில்
வெற்றிகரமாக நடந்தேறியது.

கூட்டத்தின் நோக்கத்தை விளக்கிய மாவட்டச்செயலர் தோழர்
என். ராமகிருஷ்ணன், சேவையை மேம்படுத்துவதற்கான   பல
நல்ல  கருத்துக்களை முன் வைத்தார்.  மாற்றல் உத்திரவுகள்
அமலாக்கும்போது நமது மாவட்டச்சங்கம் எடுத்த நடவடிக்கை
-களை விளக்கினார்.

       முன்னாள் மாவட்டச் செயலர் தோழர். எம். தனுஷ்கோடி,
கிளை மாநாட்டை வாழ்த்தி, பணி ஓய்வு பெறும் தோழியர்களின்
ஓய்வுக் காலம் சிறப்புற வாழ்த்தினார்.

தோழர் ஏ.ராபர்ட்ஸ், தனது உரையில் தோழர் ஆர்.கே அவர்கள்,
பல முன்னணி  இளைஞர்களுக்கெல்லாம்    ஆதர்ஸ நாயகராக 
திகழ்ந்ததை நினைவுகூர்ந்து,இயக்கம் வளர நாம் செய்யவேண்டிய 
பணிகளை எடுத்து உரைத்தார்.

மாநில சங்கத்தின் சார்பாக வாழ்த்துரை வழங்கிய தோழர் எல்.எஸ்
தோழியர்கள்,   மாவட்ட துணைத்  தலைவர். எஸ். விஜயலட்சுமி-II, 
ஆர்.விஜயலட்சுமி பொள்ளாச்சி, ராம் நகர் கே.எஸ்.சுபத்ரா,டிவிஎஸ்
நகர். என்.எஸ்.ராஜலட்சுமி ஆகியோரின் சிறப்பியல்புகளை எடுத்து
உரைத்தார்,   40 ஆண்டுகள் இலாகா பணி ஆற்றியதோடு, NFTE-BSNL
உறுப்பினர்களாக மிகக் கடுமையான சூழ்நிலையிலும் தொடர்ந்ததை 
பாராட்டினார்.  தோழியர் எஸ். விஜி,  இயக்கப் பணிகளில்    தன்னை 
முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு ஆற்றிய பணிகளை நினைவு 
கூர்ந்தார்.
தமிழ் மாநில மகளிர் அணி சார்பாக தஞ்சை தோழியர் லைலா பானு
பங்கேற்று தோழியர்களை பாராட்டி உரையாற்றியதோடு, பல்வேறு
புதிய உத்திரவுகளை விளக்கமாக எடுத்து உரைத்தார்.  

முன்னாள் சம்மேளனச் செயலர் தோழர் ஆர்.கே அவர்கள் சிறப்பான
உரையை நிகழ்த்தினார்.
நாட்டு நடப்பை, தேசபக்திமிக்க வீர தீரச் செயல்களை, சங்கச் செய்தி
-களை, BSNLEU சங்கத்தின் இயலாமைகளை எளிய தமிழில்,யதார்த்தமாக
நமது வெப்-சைட்டில் வெளியிடுவதை பாராட்டினார்.

     15 ஆண்டுகளுக்கு முன் U.S West கம்பெனி கோவையில் நுழைய 
முயன்றபோது , கோவையில் சிறப்பான கருத்தரங்கம் நடத்தி, அன்றைய
நிர்வாகத்தோடு  நேரடியாக மோதி வாதிட்டு, தடுத்த வரலாற்று சிறப்பை
நினைவு கூர்ந்து இன்று நடைபெறும் அவலத்தை விளக்கினார்.

தனக்கே உரிய பாணியில், ஒருவன்  வெள்ளை சாக்ஸ் ஒன்றையும்
கறுப்பு சாக்ஸ் ஒன்றை அணிந்திருந்தானாம். ஏன் இப்படி பொருத்தம்
இல்லாமல் அணிந்திருக்கிறாய் என்று கேட்டபோது, என் அப்பா, 
இதுபோல இரண்டு Pair வாங்கிக் கொடுத்து விட்டார் என்று மடத்தனமாக 
சொன்னது போல, இன்றைய அங்கீகாரச்சங்கம் செயல் படுகிறது என்று 
விளக்கினார்.

 கார்ப்பரேஷன் ஆகும்போது, இப்போது அபிமன்யூ செய்வது போல
சைவப் போராட்டங்கள் நடத்தி இருந்தால் மத்திய அரசு பென்சனை
பெற்றிருக்க முடியுமா என்று வினவினார்.
  ஊழியர்கள், BSNLEUவை நம்பி ஏமாந்து விட்டதை உணர்கிறார்கள்!
          மீண்டும் எழுவோம் புத்தேழுச்சியோடு ! 
அடுத்த தேர்தலில் NFTE-BSNLன் வெற்றிதான் BSNL ஊழியர்க்கு 
நல் வாழ்வளிக்கும் ! ஆகவே அனைவரும் அதற்காக ஊழைக்க
வேண்டும் என்று  வலியுறுத்தி உரையை நிறைவு செய்தார்.

  பணி ஓய்வு பெற்றோர் சார்பாக தோழியர் எஸ். விஜயலட்சுமி
ஏற்புரை நிகழ்த்தினார்.
  
  PGM அலுவலகத்தின் புதிய கிளைச்செயலர் தோழர்.G.சம்பத்குமார்
நன்றி நவில, நூறாமாண்டு காணும்  தேசிய கீதம் இசைக்க கூட்டம்
நிறைவுற்றது. 

No comments:

Post a Comment