Thursday, 31 May 2012


அன்பு வாசகப்  பெருமக்களே,


                        வணக்கம் ! பழைய paid web siteல் தொடர
நாம் முடிவெடுத்து     தேவையான  நடவடிக்கைகளை 
மேற்கொண்டோம் !


    ஆகவே, இனிமேல் 


                nftecoimbatore.com 


என்ற வெப் விலாசத்திலேயே நீங்கள் கோவை மாவட்டச்
வெப் செட்டை காணலாம் ! வாசகர்கள் நல்லாதரவு தொடர
வேண்டுகிறோம். 


    மாநில சங்கம், கும்பகோணம்,வேலூர், மதுரை, கடலூர், 
தஞ்சை உள்ளிட்ட மாவட்டச் சங்கங்கள் தங்களது லிங்கை
மாற்றித் தருமாறு வேண்டுகிறோம்.


    


  Dear Visitors, for your kind attention !


Hereafter nfte coimbatore Union"s web site will operate in the erstshile
web address as follows


  nftecoimbatore.com 

Monday, 28 May 2012

ஒரு கண்ணுக்கு வெண்ணை, ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பு,பாரபட்சம் எதிர்த்து போராட  வேண்டிய நேரம் வந்துவிட்டது,
BSNL நிர்வாகம் வெறும் 3000 ITS  அதிகாரிகளை குஷால் படுத்த வேண்டி,
BSNL -க்கு option  கொடுக்க அவர்களை கெஞ்சி காலில் விழுந்துவிட்டது.

BSNL -க்கு பொருளாதார நெருக்கடி என்று கூவிக்கூவி அழுதுவிட்டு,
BSNL -ஊழியர்களுக்கு வழங்கிவந்த பல allowance -களை நிர்வாகம்
பறித்து விட்டது. போனஸ், மருத்துவபடி, LTC  போன்ற சலுகைகள்.

போராட வேண்டிய அங்கீகரிக்கப்பட்ட  நம்பூதிரி சங்கத்தையும்
போராட விடாமல் அவர்களை மூலையில் போட்டு முடமாக்கிவிட்டது.

ஆனால்,  திடீரென்று BSNL -நிர்வாகம், வெறும் 3000  ITS  அதிகாரிகளுக்காக
பல புதிய சலுகைகளை,  ரூ 1300/- கோடிவரை, இவர்களின் OPTION -காக
கொடுக்க தயாராக உத்தரவுகளை வெளியிட்டுள்ளது. இது மாபெறும்
துரோகம் ஆகும்.

ஆகவே, அனைத்து தொழிற்சங்களும், ஒரு கூட்டு போராட்டத்தை துவங்க
முடிவு செய்துள்ளது.

1.     31-05-2012   அன்று உணவு இடைவேளை  ஆர்ப்பாட்டம்,

2.     06-06-2012    அன்று மாபெறும் தர்ணா

3.     13-06-2012    அன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்.

         ஆகவே, இந்தியா முழுவதும் பாரபட்சம் களைய மாபெறும்
வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆயத்தமாவோம்.

         ஒரு சில ITS -அதிகாரிகளின் தயவை நாடி, காலில் விழுந்த நிர்வாகம்,
BSNL -லின் 3 லட்சம் தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கைகளான
78.2 % IDA, 5 கட்ட பதவி உயர்வு, SC/ST பதவி உயர்வு ஒதுக்கீடு.,, என
தொடர்ந்து தர மறுத்து ஊழியர்களின்  வயிற்றில் அடித்ததை
அனுமதியோம்.  நிர்வாகத்திற்கு சரியான பாடம் புகட்ட ஒன்றுபட்ட
போராட்டம் மூலம் புரிய வைப்போம்.

Sunday, 27 May 2012


மீண்டும் ஆராயுங்கள் ! TRAIக்கு டெலிகாம் கமிஷன் யோசனை !!

சுப்ரீம்  கோர்ட் தீர்ப்பின் காரணமாக 122 ஸ்பெக்ட்ரம் லைசன்ஸ்கள்
ரத்து செய்யப்பட்டது. அந்த ஸ்பெக்ட்ரத்தை மறு ஏலம் விடும்போது
10 மடங்கு குறைந்தபட்ச விலை வைத்து  ஏலத்தை     துவக்குமாறு 
TRAI கூறியுள்ளது.

அதற்குஅனைத்து தனியார் கம்பெனிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து
உள்ளன.
இது பற்றி முடிவெடுக்க  26-5-12 அன்று டெலிகாம் கமிஷன்  கூடியது

     மற்ற விஷயங்களுக்கு எல்லாம் TRAI சொல்லுவதே வேத வாக்கு
என்று முடிவெடுக்கும் டெலிகாம் கமிஷன், இதற்கு மட்டும் தனியார்
கம்பெனிகளின் நிர்பந்தத்திற்கு அடிபணிந்து  முடிவுஎதுவும் எடுக்காமல்
TRAI மீண்டும் தனது பரிந்துரையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்
என்று கேட்டுக்கொள்வது என்று தீர்மானித்துள்ளது.   

Saturday, 26 May 2012


                       தலைமைச் செய்திகள் !

 நமது சங்கத்தின் தலைமை கீழ்க்கண்ட முடிவுகளைஎடுத்து உள்ளது.
      அடுத்த தேர்தல் புதிய அங்கீகார விதிகளின்படிதான்
நடத்தப்பட வேண்டும்.
BSNL புதிய அங்கீகார விதிகளை உடனடியாக உருவாக்க
வேண்டும்.
     அநேகமாக, அனைத்து சங்கங்களும் அதற்கு இசைவு
தெரிவித்து உள்ள சூழலில்,  நிர்வாகம் வேண்டுமென்றே
காலம் கடத்துமானால்  காலவரையற்ற உண்ணாவிரதம்
உள்ளிட்ட போராட்டங்களை நடத்துவது.
ஊழியர்கள் 78.2 சத ஊதிய இணைப்பு மறுக்கப்பட்டதால்
தொடர் இழப்புக்கு ஆளாகிறார்கள். ஆகவே உடனடியாக
அந்த நியாயமான கோரிக்கையை பெற தொடர்ந்து மேல்
நடவடிக்கைகள் மேற்கொள்வது.
  -------------------------------------------------------------------------------------------
             அனைத்து சங்க கூட்ட முடிவுகள்


         23-5-12 அன்று தோழர் நம்பூதிரி கூட்டிய அனைத்துச் சங்க
கூட்டத்திற்கு நமது சங்க பொதுச் செயலர்  தோழர் சந்தேஷ்வர்
சிங் தலையேற்றார்.
   Forum of All Unions and Associations என்ற பதாகையின் கீழ்கண்ட
முக்கியமான கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தொடர்ந்து
போராட்டங்களை நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
                               கோரிக்கைகள் :
1)  78.2 சத IDA Merger, போனஸ், பறிக்கப்பட்ட மெடிக்கல் அலவன்ஸ்,
    LTC, LTC சலுகையை பயன்படுத்தும் போது    லீவ் என்கேஷ்மெண்ட்
    ஆகியவற்றை மீட்பது.....
2) BSNLன் நிதி ஆதாரத்தை மேம்படுத்த,ஏற்கனவே ஒப்புக்கொண்ட
    நிதி உதவிகளை வலியுறுத்திப் பெறுவது
3) BSNLக்கு விருப்பம் தராத ITS அதிகாரிகளை விடுவிப்பது
  .
                                     போராட்ட திட்டம் :
6/6/12 அன்று அனைத்து ஊழியர்களும் பிரதமர் / துறை அமைச்சருக்கு
அஞ்சலட்டை அனுப்பும் போராட்டம்.
27-6-12 அன்று GM/CGM அலுவலகங்களை நோக்கி பேரணி

18, 19- 7-12 ஆகிய இரண்டு நாட்களுக்கு தர்ணா

உற்சாகமிகு நாற்பெரும் விழா !!இம்மாதம் பணி ஓய்வு பெறும் நான்கு தோழியர்க்கு 
பாராட்டு விழா!
சேவை மேம்பாட்டு கருத்தரங்கம் !
PGM அலுவலகத்தின் கிளை மாநாடு !!
மாவட்டச் செயற்குழு !  

என்று நான்கு  நோக்கத்தோடு கூட்டப்பட்ட சிறப்புக் கூட்டம்
மாவட்டத்  தலைவர்  தோழர். எஸ்.ஸ்ரீதர்    தலைமையில்
வெற்றிகரமாக நடந்தேறியது.

கூட்டத்தின் நோக்கத்தை விளக்கிய மாவட்டச்செயலர் தோழர்
என். ராமகிருஷ்ணன், சேவையை மேம்படுத்துவதற்கான   பல
நல்ல  கருத்துக்களை முன் வைத்தார்.  மாற்றல் உத்திரவுகள்
அமலாக்கும்போது நமது மாவட்டச்சங்கம் எடுத்த நடவடிக்கை
-களை விளக்கினார்.

       முன்னாள் மாவட்டச் செயலர் தோழர். எம். தனுஷ்கோடி,
கிளை மாநாட்டை வாழ்த்தி, பணி ஓய்வு பெறும் தோழியர்களின்
ஓய்வுக் காலம் சிறப்புற வாழ்த்தினார்.

தோழர் ஏ.ராபர்ட்ஸ், தனது உரையில் தோழர் ஆர்.கே அவர்கள்,
பல முன்னணி  இளைஞர்களுக்கெல்லாம்    ஆதர்ஸ நாயகராக 
திகழ்ந்ததை நினைவுகூர்ந்து,இயக்கம் வளர நாம் செய்யவேண்டிய 
பணிகளை எடுத்து உரைத்தார்.

மாநில சங்கத்தின் சார்பாக வாழ்த்துரை வழங்கிய தோழர் எல்.எஸ்
தோழியர்கள்,   மாவட்ட துணைத்  தலைவர். எஸ். விஜயலட்சுமி-II, 
ஆர்.விஜயலட்சுமி பொள்ளாச்சி, ராம் நகர் கே.எஸ்.சுபத்ரா,டிவிஎஸ்
நகர். என்.எஸ்.ராஜலட்சுமி ஆகியோரின் சிறப்பியல்புகளை எடுத்து
உரைத்தார்,   40 ஆண்டுகள் இலாகா பணி ஆற்றியதோடு, NFTE-BSNL
உறுப்பினர்களாக மிகக் கடுமையான சூழ்நிலையிலும் தொடர்ந்ததை 
பாராட்டினார்.  தோழியர் எஸ். விஜி,  இயக்கப் பணிகளில்    தன்னை 
முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு ஆற்றிய பணிகளை நினைவு 
கூர்ந்தார்.
தமிழ் மாநில மகளிர் அணி சார்பாக தஞ்சை தோழியர் லைலா பானு
பங்கேற்று தோழியர்களை பாராட்டி உரையாற்றியதோடு, பல்வேறு
புதிய உத்திரவுகளை விளக்கமாக எடுத்து உரைத்தார்.  

முன்னாள் சம்மேளனச் செயலர் தோழர் ஆர்.கே அவர்கள் சிறப்பான
உரையை நிகழ்த்தினார்.
நாட்டு நடப்பை, தேசபக்திமிக்க வீர தீரச் செயல்களை, சங்கச் செய்தி
-களை, BSNLEU சங்கத்தின் இயலாமைகளை எளிய தமிழில்,யதார்த்தமாக
நமது வெப்-சைட்டில் வெளியிடுவதை பாராட்டினார்.

     15 ஆண்டுகளுக்கு முன் U.S West கம்பெனி கோவையில் நுழைய 
முயன்றபோது , கோவையில் சிறப்பான கருத்தரங்கம் நடத்தி, அன்றைய
நிர்வாகத்தோடு  நேரடியாக மோதி வாதிட்டு, தடுத்த வரலாற்று சிறப்பை
நினைவு கூர்ந்து இன்று நடைபெறும் அவலத்தை விளக்கினார்.

தனக்கே உரிய பாணியில், ஒருவன்  வெள்ளை சாக்ஸ் ஒன்றையும்
கறுப்பு சாக்ஸ் ஒன்றை அணிந்திருந்தானாம். ஏன் இப்படி பொருத்தம்
இல்லாமல் அணிந்திருக்கிறாய் என்று கேட்டபோது, என் அப்பா, 
இதுபோல இரண்டு Pair வாங்கிக் கொடுத்து விட்டார் என்று மடத்தனமாக 
சொன்னது போல, இன்றைய அங்கீகாரச்சங்கம் செயல் படுகிறது என்று 
விளக்கினார்.

 கார்ப்பரேஷன் ஆகும்போது, இப்போது அபிமன்யூ செய்வது போல
சைவப் போராட்டங்கள் நடத்தி இருந்தால் மத்திய அரசு பென்சனை
பெற்றிருக்க முடியுமா என்று வினவினார்.
  ஊழியர்கள், BSNLEUவை நம்பி ஏமாந்து விட்டதை உணர்கிறார்கள்!
          மீண்டும் எழுவோம் புத்தேழுச்சியோடு ! 
அடுத்த தேர்தலில் NFTE-BSNLன் வெற்றிதான் BSNL ஊழியர்க்கு 
நல் வாழ்வளிக்கும் ! ஆகவே அனைவரும் அதற்காக ஊழைக்க
வேண்டும் என்று  வலியுறுத்தி உரையை நிறைவு செய்தார்.

  பணி ஓய்வு பெற்றோர் சார்பாக தோழியர் எஸ். விஜயலட்சுமி
ஏற்புரை நிகழ்த்தினார்.
  
  PGM அலுவலகத்தின் புதிய கிளைச்செயலர் தோழர்.G.சம்பத்குமார்
நன்றி நவில, நூறாமாண்டு காணும்  தேசிய கீதம் இசைக்க கூட்டம்
நிறைவுற்றது. 

Friday, 25 May 2012

மாவட்ட சங்க விழாக்கள் 26-05-2012.


1.   26-05-2012 அன்று நமது மாவட்ட சங்கம் சார்பில்
ஓய்வு பெறும், நமது வீராங்கனைகளான தோழியர்கள்
S.விஜயலஷ்மி -II, சுபத்ரா, N.S.ராஜேஸ்வரி, விஜயலஷ்மி-
பொள்ளாச்சி ஆகியோர் உட்பட, நமது தோழர்கள்
ஓய்வு பெறுகிறார்கள். எனவே , நமது பாரம்பர்ய வழக்கப்படி,
மூத்த தோழர்களை பாராட்டும் வண்ணம் நமது மாவட்ட
சங்கம் பாராட்டு விழா நடத்துகிறது.

2.    PGM அலுவலக கிளை மாநாடு, கிளைத்தலைவர்
தோழியர் S.விஜய லஷ்மி அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது.

3.    மாவட்ட செயற்குழுக்கூட்டம் தோழர் S.ஸ்ரீதர் மாவட்ட தலைவர்
       அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது.

4     சேவை மேம்பாடு கருத்தரங்கம் நடைபெறுகிறது,
நமது முன்னால் சம்மேளன செயலரும், நமது ஒப்பற்ற தலைவருமான
தோழர் RK  சிறப்புறை ஆற்றுகிறார்.

நமது மாநில மகளிர் அணித் தலைவி தோழியர் லைலாபானு- தஞ்சை
அவர்கள் வாழ்த்துரை வழங்க உள்ளார்.


       கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சிறப்பு சிறு விடுப்பு
       அனுமதி உண்டு. நிர்வாகம் உத்தரவு எண்ணை BSNL Intranet- ல்
       எடுத்துக்கொள்ளவும்.

       அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.

                                                                    மாவட்ட செயலர்.   NRK.

nftecoimbatore.com hack சதி.


நமது வெப்சைட்டை யாரோ??? கடத்தி விட்டார்கள் எனவே,
இலவச வெப்சைட்டை இன்று முதல் துவங்கியுள்ளோம்,
ஒத்துழைக்க வேண்டுகிறோம்.

                               மாவட்ட செயலர். NRK